இன்று நாம் நற்கருணை ஆராதனையை
அணுசரிக்கிறோம். இயேசுவானவர் இந்த வைபவத்தைப் பின்வரும் காரியங்களுக்காக
நடத்தினார் என்பதை நினைவில் நிறுத்துங்கள்:
1. ஞாபகார்ந்த ஆகாரம் – மனுஷ குமாரன் நமக்காக பாடுபட்டு
மரித்தார்.
2. ஐக்கிய ஆகாரம் – தேவன் தமது
குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் மனுகுலத்தோடு ஐக்கியத்தில் ஈடுபட்டார்.
3. ஸ்தோத்திர ஆகாரம் – தேவ குமாரனின் மரணத்தின் மூலம், பாவ மன்னிப்பை
மட்டுமல்லாமல் அவரிடத்தில் புத்திர சுவிகாரத்தையும் பெற்றுக் கொள்கிறோம்.
தேவ பந்திக்கு வரும் போது இந்த
மூன்று காரியங்களையும் மறந்திட வேண்டாம்.
வேதத்தை வாசிக்கும்படியான
நேரத்தைத் தந்து தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.
சூழ்நிலைகளை மாற்றும்படி
ஜெபிப்பதற்காக பரிசுத்த ஆவியானவர் நம்மை தொடர்ந்து வழிநடத்துவாராக.
தேவன் நமக்கு நல்லாரோக்கியத்தையும்
கவலைகளுக்கு எதிரான ஜெயத்தையும் தந்தருளுவாராக!
தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.
No comments:
Post a Comment