கிறிஸ்மஸ் விழாவை மகிழ்ந்து
கொண்டாடும் அதே வேளையில், நம்மைச் சுற்றி நிகழும் சம்பவங்களைக் குறித்தும்
மறக்கலாகாது. பாரிஸ் நகரில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலை நீங்கள் மறந்திருக்க
மாட்டீர்கள்! அபு சயாப் கும்பலால் கழுத்தறுக்கப்பட்டுக் கொல்லப்பட்ட முதல்
மலேசியரை ஞாபகத்தில் வைத்திருப்பீர்கள்! மாலியில் உள்ள விடுதியில் இன்னொரு
பயங்கரவாதத் தாக்குதலையும் நினைவு படுத்திப் பார்க்க முடிகிறதா!
இவ்வாண்டின் கிறிஸ்மஸ் கருப்பொருள்: நம்பிக்கையின் வெகுமதி!
சோர்வுற்றிருக்கும் இவ்வுலகம் மகிழும் காரணம் இதுவே.
நமது உள்ளங்களையும், ஆவியையும்,
விண்ணப்பங்களையும் இயேசுவானவரிடத்தில் ஜெபத்தில் ஒருங்கிணைத்து, இந்த
முட்டாள்தனமான தாக்குதல்கள் யாவற்றிலும் பாதிக்கப்பட்டவர்களுக்காக சமாதானத்தைக்
கொண்டு வருவோமாக. நீங்களும் நானும் சொந்த நலன்களை மட்டும் கவனித்துக்
கொண்டிருந்தால் கிறிஸ்மஸ் எந்த அர்த்தத்தையும் கொண்டு வர முடியாது..
நாம் அனைவரையும் ஆண்டவர்
ஆசீர்வதிப்பாராக.
No comments:
Post a Comment