Sunday, June 5, 2016

ஹூடுட் சட்டம்

கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நடந்த சம்பவம் தேசத்தின் ஆவிக்குரிய முன்னேற்றத்தைத் தாக்கம் செய்திருக்கிறது. பாஸ் கட்சியின் தேசியத் தலைவர் மசோதாவின் முதல் வாசிப்புக்காக தங்கள் சட்ட திருத்தத்தைச் சமர்ப்பித்தார். மேலோட்டமாக அந்த சட்டம் கிளந்தானில் ஹூடுட் சட்டத்தை அமல் படுத்த வலியுறுத்துகிறது. அம்மாநிலத்தில் குற்றச்செயல்களில் ஈடுபடுகிறவர்களுக்கு ஷாரியா பாணியிலான தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

என்னைப் பொறுத்த வரை இந்த நடவடிக்கை பின்வரும் காரியங்களைக் காட்டுகிறது:

1.             அம்னோ நீடித்து நிலைத்திருக்க வேறு எதிர்கட்சிகள் தேவைப்படவில்லை. சமய ஐக்கியத்திற்காக வேறு எந்த எதிர்கட்சியுடனும் கூட்டு சேரத் தயங்காது.

2.             சமய ரீதியாக அந்த மசோதா கிளந்தானில் மட்டும் செயல்படுத்தப்படும். ஆனால், அதன் செயலாக்கம் வெற்றிபெறும் பட்சத்தில், இதர மாநிலங்களுக்கும் விரிவாக்கம் காணும். இதன் மூலம் இந்நாடு இஸ்லாமிய நாடாக மாறும் வாய்ப்பு இருக்கிறது.

3.             நம்மைப் போன்ற பன்மை சமுதாயத்தில் இது குடிமக்களை ஆபத்துக்கு இட்டுச் செல்லும். ஒவ்வொருவரும் இந்த ஷாரிய சட்டத்துக்கு அடிபணிய கட்டாயப்படுத்தப்படுவர்:
-          கரம் அல்லது கால் வெட்டப்படுதல்
-          பொது கசையடி
-          பொது கல்லடி

4.             குடிமக்கள் அனைவரையும் சமமாகப் பார்க்கும், தற்போது செயல்படுத்தப்படும் சட்டதிட்டத்தை மறுக்கச் செய்யும். பின்னர் ஒவ்வொரு உலாமாக்களும் (இஸ்லாமிய சமய குரு) சுய இச்சையின்படி சட்டத்தை வியாக்கியானம் செய்யத் தொடங்குவர்.

இக்காலக்கட்டம் ஒவ்வொரு விசுவாசிகளுக்கும் முக்கியமானது. நமது தேசத்தில் என்ன நடக்கிறது என்று கூர்ந்து கவனியுங்கள். ஜெபிக்கும் நேரத்தில் இது உதவியாக இருக்கும். நமது ஜீவியத்திற்கும் சாட்சிக்கும் கற்றுக்கொடுக்கப்பட்டபடி நமது சாட்சியை தற்காக்க உதவும். ஒடுக்கப்படுவதற்கு நம்மை ஆயத்தப்படுத்தவும் இயேசு கிறிஸ்துவின் வருகைக்கும் இது நம்மை ஆயத்தப்படுத்தும்.


மலேசியா, நமது தேசத்தைக் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக!

No comments:

Post a Comment