Tuesday, June 7, 2016

மன்னிப்பு


---------------------------------------------------------------------------------------------------------------
முன்னுரை:

மன்னிப்பு எப்போதும் கிறிஸ்தவத்தோடு தொடர்புடைய செயலாகும்.
நான் மன்னிப்பைத் தர அல்லது பெற வேண்டும் என்று நான் எப்படி அறிந்து கொள்ளலாம்?

a)       நம்மைச் சூழ்ந்துள்ள மனிதர்களோடு உள்ள உறவில் தவறு ஏற்படும் போது.
b)       ஒருவரை அல்லது ஒரு குழுவை நாம் தவிர்க்க முற்படும் போது.
c)        வெறுப்பு/காழ்ப்புணர்ச்சி/வீண்பேச்சு அதிகரித்துக் கொண்டு போகும்போது

ÿ  நாம் கோபப்படக் கூடாது என்று சொல்லப்படவில்லை. ஆனால், நாம் அதைக் கட்டுப்படுத்திக் கையாள வேண்டும் என்று சொல்கிறது. (எபேசியர் 4.26, யாக்கோபு 1.19-20 வாசிக்கவும்).
ÿ  இந்தக் கேள்வியை உனக்கே கேட்டுக் கொள்ளவும்: மன்னிப்பு சாத்தியப்படுமா?

1. ஒப்புரவாகுதல்
a.        தேவன் நம்மை மன்னித்தார் மத்தேயு 26:28
b.        தேவன் நம்மை ஒப்புரவாக்கினார் - 2 கொரிந்தியர் 5:20
உங்களைச் சோதித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்
 குடும்பத்தில், சபையில், வேலையிடத்தில் ஒவ்வொருவரையும் சந்தித்து முகமுகமாய் பார்த்து, புன்னகைத்து, கைகுலுக்கி, ‘நான் உங்களை நேசிக்கிறேன் சகோதரனே/சகோதரியே’, என்று சொல்லுங்கள். இவர்களில் யாரையாவது நீங்கள் விலக்கினால், உங்களுக்கும் அவருக்கும் உள்ள உறவில் பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தப்படுகிறது. தேவனுடைய உதவியோடு, இப்பிரச்சனையைத் தீர்க்க வேண்டியுள்ளது.
c.        நம்மைச் சூழ்ந்துள்ள ஜனங்களோடு உள்ள உறவு. – மத்தேயு 5: 23-24

2. மன்னியாமை = பாவம்
மத்தேயு 6: 14 -15
ÿ  விஷம்
ÿ  சிறை
ÿ  பாவம்

3. எப்படி நான் மன்னிக்கத் தொடங்குவது? (நடைமுறை அப்பியாசம்)
1.     தேவன் உங்களை மன்னித்தார் என்பதை ஞாபகப்படுத்திக் கொள்.
2.     செயல்படுவதற்கு முன் ஜெபித்துக் கொள்.
3.     உறவு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை நீடிக்க விடாதே (ஒரு நாள்) – எபே. 4.26
4.     முகமுகமாய் சந்தித்துப் பேசி தெளிவு படுத்திக் கொள்.
5.     புறம் பேசுவதையோசெத்துப்போனசமூக ஊடகத்தில் பேசுவதையோ தவிர்த்துக் கொள்.
6.     மன்னித்துவிடு & மறந்துவிடு

முடிவுரை:

ÿ  பேசுவது போல் மன்னிப்பது எளிதான காரியமல்ல. ஆனால், தேவனுடைய உதவியால் அது சாத்தியமே. பிறருடைய மன்னிப்பைப் பெற்று அவருடைய சாயலில் நிலைத்திருக்க வேண்டும்.
---------------------------------------------------------------------------------------------------------------
பின்வரும் பிரதிபலிப்புக் கேள்விகளைக் கலந்துரையாடவும்:

1.        தேவனுடைய மன்னிப்பைப் பெற்றுக் கொண்டாயா?
2.        தேவனுடைய உறவில் நாம் ஒப்புரவாகியுள்ளோமா?

3.        இன்று நான் மன்னித்து ஒப்புரவக வேண்டியுள்ள நபர் யாராவது என் சிந்தனையில் உள்ளாரா

No comments:

Post a Comment