Tuesday, June 7, 2016

தேவனே, நீரே எனக்குத் தேவை.

எனக்குப் புதிதாக தோன்றிய இரண்டு ஆங்கில ஆராதனைப் பாடல்கள் என் கவனத்தை ஈர்த்தன.

முதல் பாடல் மாட் மேயரால் எழுதப்பட்டது – நீர் எனக்குத் தேவை.
அதன் பாடல் வரிகள் இவ்வாறு அமைந்துள்ளன:
என் ஒரே அரண்
என் நீதிபரர்
தேவனே, நீரே எனக்குத் தேவை.

நமக்காக சிலுவையில் தமது இரத்தத்தைச் சிந்தியதால், நமது அறியாமையினிமித்தம் பிதாவின் சமூகத்தில் நம்மைத் தற்காத்து வாதாடுகிறவர் இயேசுவானவர் என்று அப்போஸ்தலர் பவுல் எழுதியுள்ளார்! சங்கீதக்காரனாகிய தாவீதும் பல முறை கர்த்தரே நமது நீதிபரர் என்று குறிப்பிட்டுள்ளார். இது பெரிய காரியமானாலும், இயேசுவானவரின் மீட்புச் செயலின் மூலம் நாம் பூரணமானவர்களாகவும் நீதிமான்களாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளோம்.

கற்பனை செய்து பாருங்கள்: 
பல பாவங்களினிமித்தம் நாம் குற்றவாளிகளானோம்
நாம் ஆக்கினைக்குப் பாத்திரரானோம்
ஆயினும், நமக்குப் பாத்திரமான தண்டனையை இயேசுவானவரே நேசத்தின் மிகுதியினால் சுமந்து கொண்டார். இன்று நாம் குற்றமற்றவர்கள் என்று பறைசாற்றுகிறார்.
தேவனுடைய அன்பு இப்படியிருக்கையில், நமது பிரதியுத்திரம் எப்படியிருக்க வேண்டும்?

இரண்டாவது பாடலைக் கிரிஸ் தொம்லின் எழுதியுள்ளார் – யாருக்கு நான் அஞ்சுவேன் (தேவதூத சேனை)
அந்தப் பாடல் வரிகள் பின்வருமாறு அமைகிறது:
என் பின்னால் நிற்பவர் இன்னார் என்று அறிவேன்
என் முன்னால் செல்பவர் இன்னார் என்று அறிவேன்
தேவ தூதரின் சேனை
எப்போதும் என் பக்கத்தில் நிற்கிறது
அவர் என்றென்றும் ஆள்கிறவர்
அவர் என் சிநேகிதர்
தேவதூத சேனை எப்போதும் என் பக்கத்தில் நிற்கிறது.

இந்தப் பாடல் உண்மையில் என் ஜீவியத்தில் நிதரிசணமாகியுள்ளது. இந்த அண்டசராசத்தின் தேவனும் தமது ஒரே பேரான குமாரனை எனக்காக சிலுவையில் மரிக்கச் செய்தவருமான அவரைக் குறித்து நான் விழிப்புணர்வு பெற்றிருக்கிறேன். அவர் எப்போதும் எனது பக்கத்தில் இருக்கிறார். எல்லையில்லா வல்லமையும் மகிமையும் பொறுந்திய அவர் என்னை அறிந்திருக்கிறார். அவர் என்னைக் காக்கிறார்! இது அற்புதமான காரியம். இது அவரை உரக்க துதிக்கச் செய்கிறது. நீங்கள் எப்படி?

நீங்களும் உங்கள் குடும்பமும் இந்த தேவனை ஆழமாகவும் ஆனந்தமாகவும் ஆராதிப்பீர்களாக.

No comments:

Post a Comment