Sunday, June 5, 2016

இயேசுவும் அத்தி மரமும்


—————————————————————————————————————–———————————————————
முன்னுரை:
வர்ணனை: ஒருவன் ஒரு மாமரத்தை நட்டி, வளர்த்து வருடக்கணக்காக அது கனி தரும் என்று காத்திருந்தான். ஆனால், அது காய்க்கவில்லை. அவன் உணர்வு எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்.
அவ்வண்ணம், இந்த மூன்று பகுதி வேத ஆராய்ச்சியும் கனி தராத அத்தி மரத்தைப் பற்றிய அனுபவத்தையும் விவரிக்கும்.

வேத பகுதி: மாற்கு 11:12-14
மறுநாளிலே அவர்கள் பெத்தானியாவிலிருந்து புறப்பட்டுவருகையில், அவருக்குப் பசியுண்டாயிற்று.
அப்பொழுது இலைகளுள்ள ஒரு அத்திமரத்தைத் தூரத்திலே கண்டு, அதில் ஏதாகிலும் அகப்படுமோ என்று பார்க்கவந்தார். அத்திப்பழக் காலமாயிராதபடியால், அவர் அதினிடத்தில் வந்தபோது அதில் இலைகளையல்லாமல், வேறொன்றையும் காணவில்லை. அப்பொழுது இயேசு அதைப் பார்த்து: இதுமுதல் ஒருக்காலும் ஒருவனும் உன்னிடத்தில் கனியைப் புசியாதிருக்கக்கடவன் என்றார்; அதை அவருடைய சீஷர்கள் கேட்டார்கள்.

1. இயேசுவும் அத்தி மரமும்
மறுநாளிலே அவர்கள் பெத்தானியாவிலிருந்து புறப்பட்டுவருகையில், அவருக்குப் பசியுண்டாயிற்று.
அப்பொழுது இலைகளுள்ள ஒரு அத்திமரத்தைத் தூரத்திலே கண்டு, அதில் ஏதாகிலும் அகப்படுமோ என்று பார்க்கவந்தார். அத்திப்பழக் காலமாயிராதபடியால், அவர் அதினிடத்தில் வந்தபோது அதில் இலைகளையல்லாமல், வேறொன்றையும் காணவில்லை. அப்பொழுது இயேசு அதைப் பார்த்து: இதுமுதல் ஒருக்காலும் ஒருவனும் உன்னிடத்தில் கனியைப் புசியாதிருக்கக்கடவன் என்றார்; அதை அவருடைய சீஷர்கள் கேட்டார்கள்.


2. இஸ்ரேலும் அத்தி மரமும்

இது தற்செயலான சம்பவம் அல்ல. ஆனால், இயேசுவானவரின் செயலைக் குறித்த முன் அறிவிப்பு ஆகும்.
இஸ்ரேலிய ஜனங்கள் அந்த அத்தி மரத்தைப் போல் இருப்பார்கள் என்று தேவன் வர்ணிக்கிறார் என்று வேதம் உபதேசிக்கிறது.

ஓசியா 9:10
வனாந்தரத்தில் திராட்சக்குலைகளைக் கண்டுபிடிப்பதுபோல இஸ்ரவேலைக் கண்டுபிடித்தேன்; அத்திமரத்தில் முதல்தரம் பழுத்த கனிகளைப்போல உங்கள் பிதாக்களைக் கண்டுபிடித்தேன்; ஆனாலும் அவர்கள் பாகால்பேயோர் அண்டைக்குப்போய், இலச்சையானதற்குத் தங்களை ஒப்புவித்து, தாங்கள் நேசித்தவைகளைப் போலத் தாங்களும் அருவருப்புள்ளவர்களானார்கள்.

இந்த வசனம் இயேசுவானவரின்அத்திமர உவமானத்தைஉறுதி செய்கிறது.

லூக்கா 13:6-9
அப்பொழுது அவர் ஒரு உவமையையும் சொன்னார்: ஒருவன் தன் திராட்சத்தோட்டத்தில் ஒரு அத்திமரத்தை நட்டிருந்தான்; அவன் வந்து அதிலே கனியைத் தேடினபோது ஒன்றுங் காணவில்லை.
அப்பொழுது அவன் தோட்டக்காரனை நோக்கி: இதோ, மூன்று வருஷமாய் இந்த அத்திமரத்திலே கனியைத் தேடி வருகிறேன்; ஒன்றையுங் காணவில்லை, இதை வெட்டிப்போடு, இது நிலத்தையும் ஏன் கெடுக்கிறது என்றான். அதற்கு அவன்: ஐயா, இது இந்த வருஷமும் இருக்கட்டும்; நான் இதைச் சுற்றிலுங் கொத்தி, எருப்போடுவேன், கனிகொடுத்தால் சரி, கொடாவிட்டால், இனிமேல் இதை வெட்டிப் போடலாம் என்று சொன்னான் என்றார்.

அந்த திராட்சத்தோட்டத்திற்குச் சொந்தக்காரன் போல், இயேசுவானவர் அந்த இஸ்ரேல் ஜனங்களிடத்தில்கனி நாடிவந்தார். ஆனால், அவர்களோ, இலைகளைப் போன்ற தெய்வாதீனத்திற்குரிய வெளித் தோற்றத்தை மட்டும் காட்னர்.

3. இயேசுவும் நமது கனி தராத ஜீவியமும்
அவ்வண்ணம் இயேசுவும் நமது ஜீவியத்தில் கனிகளை நாடுகிறார் (யோவான் 15:16). நாம் கனி தருவதற்கே அழைக்கப்பட்டிருக்கிறோம்.
நமது எல்லா சடங்கு முறைகள் மற்றும் அடையாளங்கள் மூலம் நாமும் போலியான கிறிஸ்தவ ஜீவியத்தில் ஈடுபடலாம். ஆனால், ஆண்டவரோ, நம்மை உறுதியான, கனிமிகுந்த அகத்தில் பரிசுத்த ஆவியை வெளிப்படுத்தும் நிறைவான ஜீவியத்தில் ஈடுபட விரும்புகிறார்.

கலாத்தியர் 5:22-23
ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம்,
சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை.

முடிவுரை

இயேசுவானவர் நம் ஜீவியத்தில் அத்திமரத்திலும், இஸ்ரவேலர்களிடத்தில் எதிர்ப்பார்த்தது போல, கனி தருமாறு எதிர்ப்பார்க்கிறார்

No comments:

Post a Comment