Tuesday, June 7, 2016

இறைத் தன்மை வாய்ந்த அன்னையர்




---------------------------------------------------------

முன்னுரை:

பிரபலமான வாசகம்:

ஒவ்வொரு பிரபலமான ஆண்களுக்குப் பின்னாலும் ஒரு மகத்துவமான பெண் இருப்பார்.

ÿ  இந்த இரண்டு பெண்களும் பிரபலமான பரிசுத்தவான்களின் அன்னையர்கள் ஆவர்.

ÿ  தீமோத்தேயுவின் வாழ்வில் ஆதிக்கம் செலுத்திய மகத்துவமான இரண்டு பெண்களை வேதாகமத்தில் காணலாம்.



1. தீமோத்தேயுவின் ஜீவிய பின்னணி

அப்போஸ்தலர் 16:1-3: 1 அதன்பின்பு அவன் தெர்பைக்கும் லீஸ்திராவுக்கும் போனான். அங்கே தீமோத்தேயு என்னப்பட்ட ஒரு சீஷன் இருந்தான்; அவன் தாய் விசுவாசமுள்ள யூதஸ்திரீ, அவன் தகப்பன் கிரேக்கன். 2 அவன் லீஸ்திராவிலும் இக்கோனியாவிலுமுள்ள சகோதரராலே நற்சாட்சி பெற்றவனாயிருந்தான். 3 அவனைப் பவுல் தன்னுடனே கூட்டிக்கொண்டு போகவேண்டுமென்று விரும்பி, அவனுடைய தகப்பன் கிரேக்கன் என்று அவ்விடங்களிலிருக்கும் யூதர்களெல்லாரும் அறிந்திருந்தபடியால், அவர்கள் நிமித்தம் அவனுக்கு விருத்தசேதனம்பண்ணினான்.



தீமோத்தேயு பற்றிய சில தகவல்:

ÿ  சக விசுவாசிகளின் நன் மதிப்பைப் பெற்ற லீஸ்திராவில் உள்ள ஒரு சீஷன்.

ÿ  அவருடைய தாயார் ஒரு யூத கிறிஸ்தவர். தந்தையார் ஒரு கிரேக்கர். (அவிசுவாசி)

ÿ  தம் ஊழியத்திற்குப் பவுல் தீமோத்தேயுவைப் பயன்படுத்திக் கொண்டு அவருக்கு (தீமோத்தேயுவுக்கு) விருத்தசேதனம் செய்தார்.



2. உண்மையான விசுவாசம்:

2 தீமோத்தேயு 1:5: அந்த விசுவாசம் முந்தி உன் பாட்டியாகிய லோவிசாளுக்குள்ளும் உன் தாயாகிய ஐனிக்கேயாளுக்குள்ளும் நிலைத்திருந்தது; அது உனக்குள்ளும் நிலைத்திருக்கிறதென்று நிச்சயித்திருக்கிறேன்.

ÿ  தீமோத்தேயுவின் உண்மையான விசுவாசத்தையும் ஊழியத்தையும் பவுல் அங்கீகரித்தார்.

ÿ  மேலும், இந்த விசுவாசம் தீமோத்தேயுவின் தாயார் மற்றும் பாட்டியிடம் இருந்து வந்தது என்று அங்கீகரித்தார்.

ÿ  கிரேக்கரான தந்தை விசுவாசத்திற்குத் தடையாக இருந்தாலும், தீமோத்தேயுவின் தாயாயரும் பாட்டியும் ஆழமான விசுவாசத்தை விதைக்கச் செய்வதில் மிகுந்த கடமையாற்றியிருக்கிறார்கள் என்பதைப் பவுல் அங்கீகரித்தார்.

ÿ  ஒவ்வொரு ஞாயிறம் லோவிசாள் பிள்ளைகளோடு இல்லத்தில் தங்கி வேதாகமத்தைப் பற்றி விளக்கமளித்து, அவர்களுக்காக ஜெபிப்பார். அவருடைய பிள்ளைகளுக்குக் கிருபை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்களுக்காக ஜெபிப்பதோடு, அவர்களையும் தேவனைத் தேடுமாறு வற்புறுத்துவார்.



3. சுவிசேஷத்தில் விசுவாசம்:

2 தீமோத்தேயு 3:15:கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயதுமுதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும்.

ÿ  யூதத் தந்தைமார்கள் தங்கள் பிள்ளைகளுக்கு இல்லங்களில் தங்கள் மார்க்கத்தைப் போதிப்பது போல், தீமோத்தேயுவின் தாயாரும் பாட்டியும் அவருக்கு (தீமோத்தேயுவுக்கு) சிறு வயது முதற்கொண்டு சுவிசேஷத்தை உபதேசித்தார்கள் என்று பவுல் மேலும் கருத்துரைக்கிறார்.

ÿ  தீமோத்தேயு சுவிசேஷத்தைப் பாராட்டுகிறார் என்பதைப் பவுல் அங்கீகரித்தார்.

ÿ  சூஷானா வெஸ்லி என்ற ஜான் மற்றும் சார்ல்ஸ் வெஸ்லியின் தாயார் சிறுவார்களுக்கு பாடசாலை நடத்தி பிற கல்வியோடு தெய்வத் தன்மையையும் உபதேசித்தார். ஒவ்வொருவரும் பாடல், சுவிசேஷம், வேத மனிதரையும் பற்றி அங்கே கற்க வேண்டும். ஒவ்வொரு வாரமும் தத்தம் அன்னையர் முன்னாள் அவற்றை அவர்கள் ஒப்புவிக்க வேண்டும்.



முடிவுரை:

ÿ  இந்த 21ம் நூற்றாண்டில் பெற்றோரியல் சவால் மிகுந்த கடமையாகும். ஆனாலும் நமது பிள்ளைகளை தேவனிடத்தில் வழிநடத்தும் கடமை மாறுவதில்லை.

---------------------------------------------------------------------------------------------------------------

பின்வரும் கேள்விகளை உம் வாழ்க்கையில் பிரதிபலிக்கும் வகையில் கலந்துரையாடவும்:

1.        தங்கள் பிள்ளைகளை வளர்ப்பதில் பெற்றோர்கள் எதிர்நோக்கும் சவால்கள் யாவை?

2.        மேற்கண்ட சவால்களுக்கு மத்தியில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை தேவனண்டைக் கொண்டு வர எவ்வாறு ஆக்கப்பூர்வமான கடமையை ஆற்றலாம்?

No comments:

Post a Comment