Sunday, June 5, 2016

இயேசுவும் பட்டுப்போன மரமும்


—————————————————————————————————————–———————————————————முன்னுரை:

வினா: மடிந்து போகும் மரத்தை நாம் எப்படிக் கவனித்து அடையாளம் காண்போம்?
விடை: மடிந்து போகும் மரத்தின் அடையாளங்கள் பல. அவை ஒன்றுக்கொன்று பேரளவில் மாறுபட்டுள்ளன. அதன் இலைகள் உதிரும்போது மடியத் தொடங்குகிறது.  வியாதிப்பட்ட மரத்தின் பட்டைகள் உடைவதோடு, கிளைகள் காய்ந்து, மரம் ஒரு நாள் சாயும். மடிந்து போகும் மரத்தின் வேறு அடையாளங்கள், அதன் பட்டைகள் பஞ்சைப்போல மிருதுவாகுவது, கிளைகள் காய்ந்து போகுதல், மரம் சாய்ந்து போகுதல், மூட்டுகள் (இணைப்புகள்) மடிந்து போகுதல், மரத்தண்டு உடைந்து போகும் அளவுக்கு உறுதியிழந்து போகுதல் ஆகியன ஆகும்.
ஒரு மரம் மடிந்து போவதற்கு என்ன காரணம்?’ என்பது இன்னொரு தொடர்புடைய கேள்வியாகும்.

வேத வாசிப்பு: மாற்கு 11:12-14
மறுநாளிலே அவர்கள் பெத்தானியாவிலிருந்து புறப்பட்டுவருகையில், அவருக்குப் பசியுண்டாயிற்றுஅப்பொழுது இலைகளுள்ள ஒரு அத்திமரத்தைத் தூரத்திலே கண்டு, அதில் ஏதாகிலும் அகப்படுமோ என்று பார்க்கவந்தார். அத்திப்பழக் காலமாயிராதபடியால், அவர் அதினிடத்தில் வந்தபோது அதில் இலைகளையல்லாமல், வேறொன்றையும் காணவில்லை. அப்பொழுது இயேசு அதைப் பார்த்து: இதுமுதல் ஒருக்காலும் ஒருவனும் உன்னிடத்தில் கனியைப் புசியாதிருக்கக்கடவன் என்றார்; அதை அவருடைய சீஷர்கள் கேட்டார்கள்.

1. இயேசுவும் பட்டுப்போன அத்தி மரமும்

மத்தேயு 21:19
அப்பொழுது வழியருகே ஒரு அத்திமரத்தைக் கண்டு, அதனிடத்திற் போய், அதிலே இலைகளையன்றி வேறொன்றையுங் காணாமல்: இனி ஒருக்காலும் உன்னிடத்தில் கனி உண்டாகாதிருக்கக்கடவது என்றார்; உடனே அத்திமரம் பட்டுப்போயிற்று.

மாற்கு 11:20
மறுநாள் காலையிலே அவர்கள் அவ்வழியாய்ப் போகும்போது, அந்த அத்திமரம் வேரோடே பட்டுப்போயிருக்கிறதைக் கண்டார்கள்.

மத்தேயுவும் மாற்கும் இந்தச் சம்பவத்தைக் கூறுவதில் சிறிய வேற்றுமை காணப்படுகிறது. அக்ஷ்ணமே மரம் பட்டு போனது என்று மத்தேயு கூறுகிறார். மறுநாள் அச்சம்பவம் நடந்தது என்று மாற்கு கூறுகிறார். ஒவ்வொரு சுவிசேஷத்தையும் எழுதியவர்கள் எதில் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதை இது காட்டுகிறது.
இப்படியிருந்தாலும் இயேசுவானவர் சபித்தபடி அந்த அத்தி மரம் பட்டுப் போனது.

2. சீஷர்களும் பட்டுப்போன அத்தி மரமும்

அந்த அத்தி மரம் இயற்கையாகப் பட்டுப்போவதற்கு ஒரு சில வாரம் அல்லது மாதம் ஆகும்.
ஆனாலும், அது அவ்வளவு சீக்கிரம் பட்டுப் போனதைக் கண்டு சீஷர்கள் வியப்படைந்து இயேசுவானவரிடம் அதைப் பற்றி விசாரித்தார்கள்.

மத்தேயு 21:19-20
அப்பொழுது வழியருகே ஒரு அத்திமரத்தைக் கண்டு, அதனிடத்திற் போய், அதிலே இலைகளையன்றி வேறொன்றையுங் காணாமல்: இனி ஒருக்காலும் உன்னிடத்தில் கனி உண்டாகாதிருக்கக்கடவது என்றார்; உடனே அத்திமரம் பட்டுப்போயிற்று. சீஷர்கள் அதைக் கண்டு: இந்த அத்திமரம் எத்தனை சீக்கிரமாய்ப் பட்டுப்போயிற்று! என்று சொல்லி ஆச்சரியப்பட்டார்கள்.


இயேசுவானவர் அந்த மரத்துக்கு விரோதமாக தீர்க்கதரிசனமாக அறிவித்த காரியம் உடனடியாக நடையேறியதைக் கண்டு அவர்கள் வியப்படைந்தார்கள்.
கொந்தளிக்கும் கடலை அமைதி படுத்தியது, பிசாசை விரட்டியது போன்ற சம்பவங்களைக் கண்ட சீஷர்கள் இயேசுவானவரின் இந்த அற்புதத்தைக் கண்டு வியப்படைந்திருக்கக்கூடாது.

யோவேல் 1:12
திராட்சச்செடி வதங்கி, அத்திமரம் சாரமற்றுப்போகிறது; மாதளை, பேரீச்சம், கிச்சிலி முதலிய வெளியின் செடிகள் எல்லாம் வாடிப்போயின; சந்தோஷம் மனுபுத்திரரைவிட்டு ஒழிந்துபோயிற்று.

கனியில்லாமை தேவ ஆசீர்வாதம் இல்லாமையும் நியாயத் தீர்ப்பையும் தீர்க்கதரிசன அடையாளம் ஆகும்.

3. கனி தராத இஸ்ரவேலர்களைக் குறித்த நியாயத்தீர்ப்பு

அதே போல் இயேசுவானவரின் தீர்க்கதரிசன அறிவிப்பு வெறும் ‘(பறவைகளை) விரட்டும் பொம்மைஅல்ல. மாறாக இஸ்ரேலிய ஜனங்களுக்கும் குறிப்பாக எருசலேமியர்களுக்கும் வரவிருக்கும் நியாயத்தீர்ப்பு ஆகும்.
தங்கள் சொந்த தேசத்தில் வாழும் இஸ்ரேலிய ஜனங்கள் ரோமாபுரி ராஜ்யத்தால் அடிமைப்பட்டிருந்த இஸ்ரவேலர்களை அத்தி மரமம் போல் தேவன் நெறிப்படுத்தியிருந்தார்.
ஆயினும், அவர்கள் மனம் திரும்பால், பாவங்களில் மாய்ந்து, கனி தராமல், இயேசுவானவர் உபதேசியத்த சத்தியத்தை உதாசிணப்படுத்தினார்கள்.
கிபி.70ல் ரோமாபுரி அரசாங்கம் எருசலேம் நகரையும் தேவாலயத்தையும் முற்றாக அழித்ததன் மூலம் தேவனுடைய நியாயத்தீர்ப்பு நிறைவேறியது.

முடிவுரை
அத்தி மரத்திலும் இஸ்ரவேல் ஜனங்களிடத்திலும் எதிர்ப்பார்த்தது போல, இயேசுவானவர் நாமும் கனிதர வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறார்.
கனி தராமை வரவிருக்கும் நியாயத்தீர்ப்பைக் குறித்த உறுதியான எச்சரிக்கையாகும்.

எனவே, நாம் மனம் திரும்பி தேவ ஆவியால் ஆளுகை செய்யப்பட்டு, கனி தரும் ஜீவியத்தை நோக்கிச் செல்வோமாக

No comments:

Post a Comment