C.K. செஸ்டார்டன்
என்பவர் பின்வருமாறு கூறுகிறார்:
"ஒரு புத்தாண்டு வேண்டும் என்பதற்காக
நாம் அதைக் கொண்டாடவில்லை. ஒரு புதிய ஆத்துமா, புதிய மூக்கு, புதிய பாதம், புதிய
முதுகுத் தண்டு, புதிய காது, புதிய கண் ஆகியவை வேண்டும் என்பதற்காகவே நாமக்குப்
புத்தாண்டு தேவைப்படுகிறது."
சிந்திப்பதற்கு ஒரு
நல்ல கருத்து!
ஒரு புத்தாண்டு என்றால்
என்ன: காலத்தைக் குறிக்கும் சொல்; அல்லது கால மாற்றத்தின் அளவை?
சபையாரே, கடந்த ஜனவரி
2ல் நான் ஸ்டார் நாளிதழில் வாசித்த மிக அறுமையான கட்டுரை. ஜோசப் தான் என்ற ஒரு தலை
சிறந்த நிறுவனத் தலைவர். தேசத்தை முன்னேற்றுவதில் அதிக வாஞ்சையுடையவர் பின்வருமாறு
எழுதினார்: புத்தாண்டு என்பது காலத்தின் வளர்ச்சி மாத்திரம் அல்ல; அது தேவ
கிருபையால் கிடைத்த சிலாக்கியம் என்று காண வேண்டும். அவர் அந்தப் புத்தாண்டைக்
குறித்து மூன்று விதமான கண்ணோட்டங்களைத் தந்துள்ளார்.
பார்வை 1
காலம் என்பது ஒரு
நம்பிக்கை
இந்த மதிப்பு மிக்க புதிய
ஆண்டு நம்பிக்கையோடு கொடுக்கப்பட்டுள்ளது.
கேள்வி: என்னைச்
சூழ்ந்துள்ளவர்களுக்குத் தாக்கம் ஏற்படும் அளவுக்குக் காலத்தைக் காண்கிறேனா?
பார்வை 2
காலம் என்பது ஒரு
முதலீடு
சிந்தையில் கடந்து
போனவற்றைக் குறித்துத் தொடங்கவும். எத்தகையான ‘கனியை’ இந்த ஆண்டு முடிவதற்கு முன் காண
விரும்புகிறேன்?
பார்வை 3
காலம் என்பது பொக்கீஷம்
எங்கே உங்கள் பொக்கீஷம்
இருக்கிறதோ அங்கேதான் உங்கள் உள்ளமும் இருக்கும். 2016ம் ஆண்டு உங்களுக்கு எப்படி
அமையப் போகிறது என்பது, அந்தப் பொக்கீஷத்தையும் அது இருக்கும் இடத்தையும் சார்ந்து
இருக்கும். (என் தீர்மானத்தை என் உள்ளம் கிரகித்துச் செயல்படும்)
தேவனின் கிருபையால்
நாம் அனைவரும் இந்தப் புத்தாண்டைப் பெற்றுக் கொண்டோம். படைப்பின் செயற்பாங்கில்
நானும் அங்கம் வகிக்கும் சிலாக்கியம் எனக்குக் கிடைத்திருக்கிறது. எனவே, கனவு
காணுங்கள்; அதுவும் பெரிதாகக் காணுங்கள். தேவ அச்சத்தோடு உமக்கும் உம்மைச்
சார்ந்தவர்களுக்கும் ஒரு சிறந்த எதிர்காலத்தைப் படைத்துக் கொள்ளவும்.
உங்கள் கனவுகள் நிதர்சனமாகும்
வகையில் 2016ம் ஆண்டு அமையும். இந்த ஈவை நாம் அக்கறையோடும் மகிழ்ச்சியோடும் உபசரிப்போமாக.
2016ம் ஆசீர்வாதமாக அமையட்டும்.
No comments:
Post a Comment