ஏசாயா 6ம் அதிகாரத்தில், இடம்
பெற்றுள்ள ஒரு பகுதி, மலேசியாவின் தற்போதைய நிலைமையை வர்ணிக்கிறது. இங்கே இப்போது
அரசியல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. தேசியப் பொருளாதார நிலை படுமோசமாக
வீழ்ச்சியடைந்த நிலையில் பொது மக்கள் நம்பிக்கையை இழந்துள்ளனர். நிலைத் தன்மை
இல்லாத நிலைமையில் ஆவிக்குரிய ஜீவியத்திலும் வீழ்ச்சி கண்டுள்ளது.
இளைஞனான ஏசாயா, தேவனை ஆராதிக்க
தேவாலயத்திற்குச் செல்ல தீர்மானித்தான். இது மிகச் சிறந்த தீர்மானம் என்றும்
நிலைப்பாடு என்றும் நான் விசுவாசிக்கிறேன். கொந்தழிப்பும் குழப்பமும் ஏற்பட்டுள்ள
நிலைமையில் தீர்வையும் அடைக்கலத்தையும் நாடக் கூடிய ஒரே இடம் தேவனுடைய
பிரசன்னம்தான். தேவன் தோல்வியடைய மாட்டார். தேவனை மேலே உயர்த்தப்பட்ட நிலையை ஏசாயா
கண்டான். தேவனுடைய பிரசன்னம் தேவாலயம் முழுவதும் நிரம்பியுள்ளது.
நம்மில் சிலர் தேசத்திற்காக
கவலையுற்றிருக்கலாம். மலேசியா தோல்வியைத் தழுவும் நிலைமைக்கு விழக்கூடும் என்று மதிப்பிடுவது
ஒரு வேளை தவறாகாது. ஆனால், நமது பார்வைவை தேவனிடத்தில் ஏறெடுக்க மறவாதீர்கள். எந்த
நிலைமையிலும் தேவன் மேலே உயர்த்தப்பட்டு இருக்கிறார். அவர் நமது தேசத்தையும்
உலகின் ஒவ்வொரு தேசத்தையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்.
இத்தேசத்தின் தேவனாக செயல்பட அவரை
அழைப்பதற்குச் சோர்ந்து போக வேண்டாம். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.
No comments:
Post a Comment