Monday, June 6, 2016

தீப ஆராதனை

பெரும்பாலும் அநேக சபைகள் பாரம்பரியமாக அணுசரிக்கின்ற ஆராதனை இது. இயேசு கிறிஸ்துவின் பிறப்பை மையப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது இந்த ஆராதனை.  ஆனால், கடந்த காலங்களில் திக்கற்ற மெழுகுவர்த்தியையே ஜனங்கள் நோக்கத் தொடங்கி விட்டனர். இந்த மெழுகுவர்த்தியின் சில வெளிப்படையான தன்மைகளைப் பற்றி உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இந்தத் தன்மை நமக்குக் கிறிஸ்தவ நெறிகளை விளக்கும் பாடமாக அமையும்.

முதலாவது, ஒளி கொடுக்க மெழுகுவர்த்தி தன்னைத் தானே அழித்துக் கொள்கிறது. அதில் உள்ள மெழுகு, ஒளியை வெளிப்படுத்த போதுமான ‘எண்ணெயைக்’ கொடுக்கின்றது. கிறிஸ்தவர்களாகிய நாமும், நம்மைச் சூழ்ந்துள்ளவர்களுக்குத் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்றால் சில தியாகங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. அத்தியாகம் வேதனையைகவும் அந்தரங்கமாகவும் அமையக்கூடும். ஆனால், அதன் விளைவு அற்புதமானதாக அமையக் கூடும். யாரோ சிலர் தங்கள் சொந்த பணத்தையும் நேரத்தையும் மற்றவற்றையும் இழக்கத் துணியும்போது மற்றவர்கள் இயேசு கிறிஸ்துவின்  அற்புதமான அன்பைப் பற்றிக் கொள்ள முடியும்.

இரண்டாவது, சிறிய உருவமாக இருக்கும் மெழுகுவர்த்தி அற்பமான ஒளியையே தரக்கூடும். ஆனால், இது ஒளியின் விநோதமான தன்மையைக் காட்டுகிறது. ஓர் அறை எவ்வளவுதான் இருள் சூழ்ந்திருந்தாலும், அந்த அற்பமான ஒளி காரிருளையும் போக்கி விடும். இது உண்மையிலேயே திகைப்பான காரியம். விசுவாசிகளான நமக்கு உண்மையான சவால் நாம் செய்யும் அந்தப் பெரிய காரியத்தில் இல்லை. அந்த ‘சின்னஞ்சிறு’ கணிவின் மூலம் வெளிப்படும் ஏதோ ஒரு சில அற்பமான காரியங்கள் மற்றவர்களுக்கு அர்த்தமுள்ளதாய் அமையும். இச்செயலை இயேசு கிறிஸ்துவின் அன்பில் செய்தோமென்றால், நம்பிக்கையின் உணர்வைக் கொணர்ந்து நம்பிக்கையின்மை அல்லது விரும்பத்தகாத சூழ்நிலையில் நம்பிக்கையைக் கொண்டு வரும். அந்த ‘ஒளி’ பிரகாசித்து இயேசுவானவரின் சத்தியத்தைக் கொண்டு வரக் கூடும்!

மூன்றாவது, எல்லா மெழுகுவர்த்திகளும் வெள்ளை நிறைத்தால் ஆனவை! பிற்காலத்தில்தான் பன்னிற மெழுகுவர்த்திகள் பிரபலமடைந்தன. வெண்மை புனிதத்தையும் பரிசுத்தத்தையும் அடையாளப்படுத்துகின்றது. தூய்மை, வேற்றுமை, புனிதத்தை இந்தப் பரிசுத்தம் வெளிப்படுத்துகிறது! இயேசுவானவருக்கும் உலகில் வாழும் பிறருக்கும் உள்ள மிகப் பெரிய வேறுபாடு பரிசுத்தம்தான். இயேசுவானவர் நியாயத்தீர்ப்புக்கு அப்பாற்பட்ட‘தூய்மையானவராய்’ இருந்தார். ஆண்களையும் பெண்களையும் ஒப்பிடுகையில் ஏதோ ஒரு தூய்மை அவரிடத்தில் காணப்பட்டது. ஜனங்கள் அவரை மரியாதையோடும் உணர்திறன் நிறைந்தவராய் நோக்கினர். அவர் மற்றவர்களைவிட மாறுபட்டிருந்தார். வியாதியஸ்தர்களையும், பிசாசின் பிடியில் சிக்கியவர்களையும் அவர் துணிந்து அணுகினார். குருடர்களையும் முடவர்களையும் அவர் சுகப்படுத்தினார். பிசாசின் கட்டுகளில் உள்ளவர்களை அவர் விடுவித்தார். நமது சொந்த ஜீவியத்தில் இந்தப் பரிசுத்தத் தன்மைகளை உள்வாங்கிக் கொள்வதில் விசுவாசிகளாகிய நாம் கௌரவப்பட வேண்டும். நாமும் ‘பரிசுத்தமுள்ளவர்களாய்’ சொல்லிலும், செயலிலும், சிந்தையிலும் மாறுபட்டவர்களாய் திகழலாம். இது ஜனங்களில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

எனவே, இந்த தீப ஆராதனை நாம் அனைவரையும் அந்த மெழுகுவர்த்தியின் தன்மைக்குக் கொண்டுச் செல்ல சூழ்ந்துள்ளவர்களுக்குப் பயனுள்ளவர்களாய்த் திகழ சவால் பெற்றிருக்கிறோம்.


கிறிஸ்மஸ் வாழ்த்துகள்

No comments:

Post a Comment