Sunday, June 5, 2016

மெதடிஸ்ட் திருச்சபை வரலாறு

கடந்த ஞாயிற்றில் அங்கிள் பிடி சாமுவேலிடம் இருந்து அச்சரியமான பரிசைப் பெற்றோம். அது ஒரு புஸ்தகம். அது ஒரு சாதாரன புஸ்தகம் அல்ல. அவருடைய தந்தையான மறைதிரு எல்.ஏ. சாமுவேலின் சுய சரிதை அது. சிங்கப்பூரில் வசிக்கும் அவருடைய சகோதரரான டி.எஸ்.சாமுவேல் எழுதிய புஸ்தகம் அது. அது சிறிய புஸ்தகம் என்றாலும் ஒரு மாமனிதனின் வாழ்க்கை வரலாறு அடங்கியிருக்கிறது.

மறைதிரு எல்.ஏ.சாமுவேல் மலாயாவின் மூத்த மெதடிஸ்ட் குருவானவரில் ஒருவர். அவர் 58 வருடம் மெதடிஸ்ட் திருச்சபையில் பணியாற்றியிருக்கிறார். பேராயர் ஓல்ட்ஹமிடம் அவர் கொடுத்த வாக்கை நிறைவேற்றினார் என்பது வெளிப்படையாக தெரிகிறது. (அவரும் பேராயர் தோர்புனும் மெதடிஸ்ட் உபதேசத்தை முதலில் சிங்கப்பூரிக்கும் பின்னர் மலாயாவுக்கும் கொண்டு வந்தவர்கள்). பின்னர் அவர் ஏழை எளியோர் மத்தியில் ஊழியம் செய்தார்.

அவர்கள் மனிதர்கள் வாழ்வதற்குச் சற்றும் பொருத்தம் இல்லாத குருமனைகளில் வாழ்ந்தார்கள் என்று புஸ்தக ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். "சபையார் இல்லை,,,, சம்பளம் இல்லை,,,, பிள்ளைகள் படிப்பதற்குப் பள்ளிகள் இல்லை. அவர் முறுமுறுக்காமல் தேவ ஊழியத்தைத் தொடர்ந்தார்." இப்படி அந்த புஸ்தக ஆசிரியர் எழுதியிருக்கிறார். அவர்கள் தேவனுக்காக மலாயா நிலத்தை கதிரூட்டினார்கள்.

இந்த புஸ்தகம் என்னைச் சிந்திக்கச் செய்தது. திருச்சபை முன்னோடிகளுக்கு நான் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன். தேவ ஊழியத்தைச் செய்ய அவர்கள் எவ்வளவு கஷ்டங்களைக் கடந்து சென்றுள்ளார்கள்! மெதடிஸ்ட் திருச்சபையை வளர்க்க அயர்வில்லாத உழைப்பை வழங்கிய எல்.ஏ.சாமுவேல் மற்றும் பேராயர் ஓல்ட்ஹம் போன்ற சுவிசேஷகர்களுக்காக ஒரு நிமிடம் தேவனிடம் நன்றி செலுத்தி ஜெபிப்போம்.


அதே வேளையில் தேவன் நம்மை ஆளுகை செய்து, நமது சொந்த வழியில் வரலாற்று வித்தகர்களாக மாற்ற வேண்டும் என்றும் ஜெபித்துக் கொள்வோம். இந்த அறுமையான தேவ ஊழியர்களைத் தேவன் ஆசீர்வதிப்பாராக.

No comments:

Post a Comment