----------------------------------------------
கடந்த வார மீள்பார்வை:
1. சித்தம் 2. தேவனுடைய சித்தம் 3. தேவனுடைய சித்தம் செய்யப்படுதல்
முன்னுரை:
Trivia:
1.
தற்போதைய அரசியல் தலைவர்களில் மிக நீண்ட காலம் பொறுப்பில் இருந்த தலைவர் யார்?
2.
உலகில் வாழ்வதற்கு மிகச் சிறந்த நாடு எது?
†
ஆனால், நமது நீண்ட மனித வரலாற்றின் காரணமாக பரிபூரணத்தை இன்னும் கண்டு கொள்ளவில்லை.
1. பரலோகத்தில் செய்யப்படுவது போல:
மத்தேயு 6:10: உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக.
†
பரிபூரணத்தில் மூலம் எது என்பதை இயேசுவானவர் பரலோகத்தில் தேடச் சொல்கிறார்.
† நாம்
பரலோகத்தில் நித்தியமாக ஜீவிக்கப் போகிறோம். தற்போதைக்கு
பூலோகத்தில் ஜீவிக்கிறோம்.
1.1 பரலோகம் தேவனுடைய
சிம்மாசனம்:
மத்தேயு 5:34-35: நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; பரிச்சேதம் சத்தியம்பண்ணவேண்டாம்; வானத்தின்பேரில் சத்தியம்பண்ணவேண்டாம், அது தேவனுடைய சிங்காசனம். பூமியின்பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், அது அவருடைய பாதபடி; எருசலேமின்பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், அது மகாராஜாவினுடைய நகரம்…
†
தேவன்
பரலோகத்தில் வாசம் செய்கிறார். அங்கேயிருந்து அவர் சகலத்தையும் ஆட்சி செய்கிறார்.
†
பரலோகமே
அவரின் பரிபூரண ராஜ்யம். அங்கேயே அவருடைய பரிபூரணம் நிறைவேற்றப்படுகிறது.
1.2 பரலோகம் பரிபூரணமானது:
வெளிப்படுத்தல்
21:1-4: பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின; சமுத்திரமும் இல்லாமற்போயிற்று. யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தைத் தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கி வரக்கண்டேன்; அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப்போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது. மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார். அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது.
†
பரலோகமே
பரிபூரணமான இடம். அங்கேயிருந்து படைப்புகளுக்குப் பரிபூரணம் பாய்கிறது.
2. நமது பூலோகம்:
மத்தேயு 6:10: உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக.
†
‘பூலோகம் பரலோகமாக மாறி’ என்றென்றும்
நிலைத்திருக்க இயேசு உபதேசிக்கிறார்.
மத்தேயு 5:34-35: நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; பரிச்சேதம் சத்தியம்பண்ணவேண்டாம்; வானத்தின்பேரில் சத்தியம்பண்ணவேண்டாம், அது தேவனுடைய சிங்காசனம். பூமியின்பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், அது அவருடைய பாதபடி; …
†
பூமி தேவனுடைய பாதபடி. எல்லா படைப்புகளிலும் அவர் அக்கறையுள்ளவராய் இருக்கிறார்.
எபிரேயர் 11:16: அதையல்ல, அதிலும் மேன்மையான பரமதேசத்தையே விரும்பினார்கள்; ஆகையால் தேவன் அவர்களுடைய தேவனென்னப்பட வெட்கப்படுகிறதில்லை; அவர்களுக்கு ஒரு நகரத்தை ஆயத்தம்பண்ணினாரே.
†
பழைய
ஏற்பாட்டில் உள்ள ஜனங்கள் இந்த பரிபூரண பரலோகத்தை வாஞ்சித்தார்கள்.
யோபு 38:33: வானத்தின் நியமங்களை நீ அறிவாயோ? அது பூமியையாளும் ஆளுகையை நீ திட்டம்பண்ணுவாயோ?
†
ஜெபிக்கவும், ஜீவிக்கவும், தேவனுடைய
ராஜ்யத்தையும் அவருடைய சித்தத்தையும்
அடையாளம் காட்டவும் அழைக்கப்பட்டிருக்கிறோம்.
சுருக்கம்: 1. பரலோகத்தில் செய்யப்படுவது போல் 2. பூமியிலும்
சுருக்கம்: தேவனுடைய பரிபூரண ராஜ்யத்திற்காக ஜெபிப்பதோடு அதை பூமியிலும் முன்னுதாரணமாகக் காட்ட வேண்டும்.
---------------------------------------------------------------------------------------------------------------
பின்வரும்
கேள்விகளைக்
கலந்துரையாடவும்:
No comments:
Post a Comment