Tuesday, June 7, 2016

கர்த்தருடைய ஜெபம்


---------------------------------------------------
கடந்த வார மீள்பார்வை:
1. அன்றன்றுள்ள அப்பம்           
2. எங்களுக்குத் தாரும்

முன்னுரை:
மத்தேயு 6:12 - எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்.

  கர்த்தருடைய ஜெபத்தில் இந்தப் பகுதி மாத்திரமே விளக்கத்தைக் கொண்டிருக்கிறது.
மத்தேயு 6:14-15
14 மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார். 15 மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்.

1. மன்னிப்பு:
மத்தேயு 6:12

எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்.


1.1. நாம் அனைவரும் பாவிகளாய் இருக்கிறோம்
      ரோமர் 3:23 - எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி,

      உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது. (ஏசாயா 59:2)
  பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன். (ரோமர் 6:23).

1.2. நமக்குத் தேவனின் மன்னிப்பு தேவை
      கர்த்தாவே, நீர் அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால், யார் நிலைநிற்பான், ஆண்டவரே. (சங்கீதம்  130:3).
  தேவன் நமது பாவங்களை மன்னிக்கும் பொருட்டு நாம் மனந்திரும்பி அவருடைய மன்னிப்பை நாட வேண்டும்.

1.3. தேவன் நம்மை மன்னிக்கிறார்
      அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது. (எபேசியர் 1:7).
      நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். (1 யோவான் 1:9).

2. மன்னிப்பு:
மத்தேயு 6:12 - எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்.

2.1 மன்னிக்கப்பட்டதால் மன்னிக்க வேண்டும்:
மத்தேயு 6:14-15
14 மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார். 15 மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்.
2.2 மன்னிப்புக்கான உவமானம்

மத்தேயு 18:21-22, 35 (வாசிக்கவும்: 18:21-35)

21 அப்பொழுது, பேதுரு அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து வந்தால், நான் எத்தனைதரம் மன்னிக்கவேண்டும்? ஏழுதரமட்டுமோ என்று கேட்டான்.
 22
அதற்கு இயேசு: ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன்……
35 நீங்களும் அவனவன் தன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரமபிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார் என்றார்.

                2.3. தேவனைப் போல் மன்னித்தல்:

கொலோசெயர் 3:13

ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். (எபேசியர் 4:31-32உம் வாசிக்கவும்)

2.4 கிறிஸ்துவைப் போல் மன்னித்தல்:
லூக்கா 23:34 - அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார்.

மேற்கோள்: மன்னியாமை ஆவிக்குரிய அசுத்தமாகும். ஆதலால், பாவமன்னிப்புக்கான தேவ வார்த்தையால் கழுவப்பட்டு பரிசுத்தமாயிருங்கள். ~ ஜாய்ஸ் மேயர்

சுருக்கம்:                             1. மன்னிக்கப்படுதல்                    2. மன்னிப்பு

முடிவுரை: பிறரை நாம் மன்னிப்பதற்காக நாமும் இலவசமாக மன்னிக்கப்பட்டிருக்கிறோம்.
---------------------------------------------------------------------------------------------------------------
பின்வரும் கேள்விகளைக் கலந்துரையாடவும்:

 

1. பிறர் குற்றங்களை மன்னிக்க சித்தமில்லாத நமது குணம் எப்படி தேவனுக்கும் பிறருக்கும் உள்ள நமது உறவைப் பாதிக்கிறது?

 


2. தேவனுடைய உதவியால் நாம் எப்படிப் பிறர் குற்றங்களை மன்னித்து மறக்க முடியும்

No comments:

Post a Comment