Tuesday, June 7, 2016

கர்த்தருடைய ஜெபம்


---------------------------------------------------
கடந்த வார மீள்பார்வை:
1. பரலோகத்தில் செய்யப்படுவது போல             
2. பூலோகத்திலும்

கடந்த பாட மீள்பார்வை
தேவன் நமது பரலோகத் தந்தை;               
தேவனின் பரிசுத்தம்;                     
தேவனின் ராஜ்யம்;
தேவனின் சித்தம்
தேவனின் கட்டளை

  ஜெபத்தின் மூலம் ஏற்படும் மாற்றம்:தேவன் நமது தேவைகளில் கவனமாய் இருக்கிறார்

மத்தேயு 6:25,33: ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆகாரத்தைப்பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா?.... முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்

1. நமது அன்றன்றுள்ள அப்பம்:
மத்தேயு 6:11: எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்

  அப்பம்: மத்திய கிழக்கு ஜனங்களுக்கு இது பிரதான உணவு.
  அப்பம் ஜீவனைப் பிரதிபலிக்கிறது. அது நமது ஜீவனுக்கு ஊட்டமளித்து தக்க வைத்துக கொள்கிறது.


1.1 அனுதின மன்னா:
யாத்திராகம்ம் 16:4: அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நான் உங்களுக்கு வானத்திலிருந்து அப்பம் வருஷிக்கப்பண்ணுவேன்; ஜனங்கள் போய், ஒவ்வொரு நாளுக்கு வேண்டியதை ஒவ்வொரு நாளிலும் சேர்த்துக்கொள்ளவேண்டும்;

1.2 இயேசுவானவருக்கு முதல் சோதனை: ‘கல்லுகள் அப்பங்களாகும்படி செய்தல்
மத்தேயு 4:2-4:  2 அவர் இரவும் பகலும் நாற்பதுநாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று. 3 அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான். 4 அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.

2. எங்களுக்குத் தாரும்:
மத்தேயு 6:11: எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்

2.1 தேவன் நம்மை வருஷிக்கப்பண்ணுகிறார்:
யாத்திராகம்ம் 16:4: அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நான் உங்களுக்கு வானத்திலிருந்து அப்பம் வருஷிக்கப்பண்ணுவேன்; ஜனங்கள் போய், ஒவ்வொரு நாளுக்கு வேண்டியதை ஒவ்வொரு நாளிலும் சேர்த்துக்கொள்ளவேண்டும்;

2.2 பரிசுத்த போஷிப்பாளர்
நீதிமொழிகள் 30:8-9: மாயையையும் பொய்வசனிப்பையும் எனக்குத் தூரப்படுத்தும்; தரித்திரத்தையும் ஐசுவரியத்தையும் எனக்குக் கொடாதிருப்பீராக.
நான் பரிபூரணம் அடைகிறதினால் மறுதலித்து, கர்த்தர் யார் என்று சொல்லாதபடிக்கும்; தரித்திரப்படுகிறதினால் திருடி, என் தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்காதபடிக்கும், என் படியை எனக்கு அளந்து என்னைப் போஷித்தருளும்.

2.3. திருவருட்பேரு பெறுபவர்:
எண்ணகம்ம் 11:8: ஜனங்கள் போய் அதைப் பொறுக்கிக்கொண்டுவந்து, ஏந்திரங்களில் அரைத்தாவது உரல்களில் இடித்தாவது, பானைகளில் சமைப்பார்கள்; அதை அப்பங்களுமாகச் சுடுவார்கள்; அதின் ருசி புது ஒலிவ எண்ணெயின் ருசிபோலிருந்தது.

2 தெசலோனிக்கேயர் 3:10: ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாதென்று நாங்கள் உங்களிடத்தில் இருந்தபோது உங்களுக்குக் கட்டளையிட்டோமே.


சுறுக்கம்:          1. நமது அன்றாட அப்பம்            2. தாரும்

முடிவுரை: தேவன் நமது கரங்களின் கிரியைகளை ஆசீர்வதிப்பதால் அவர் நமக்கு அனுதினமும் திருவருட்பேறு அருளுவார்.
---------------------------------------------------------------------------------------------------------------
பின்வரும் கேள்விகளைக் கலந்துரையாடவும்:

1.     தேவனின் திருவருட்பேற்றை விசுவாசிப்பதில் நமக்கு இருக்கும் சவால்களும் போராட்டங்களும் யாவை?


2.     தேவன் நமது எல்லா தேவைகளையும் பூர்த்திசெய்வதை விசுவாசிப்பதின் அளவை எவ்வாறு அதிகரிக்கலாம்?

No comments:

Post a Comment