Tuesday, June 7, 2016

நமது சமுதாயம் மனம் உடைந்து வேதனைப்படும் ஜனங்களைக் கொண்டிருக்கிறது. உங்களுக்கு மிக அருகில் ஒருவர் தன்னம்பிக்கையற்றவர்களாகவோ, தங்கள் தோற்றத்தை அறுவறுக்கிறவர்களாகவோ இருக்கிறார்கள் என்றால், ஆச்சரியப்படுவதற்கில்லை. பலர் ஆழமான மன உலைச்சலுக்கு ஆளாகி, மன நோயாளிகளாகின்றனர். இளையோர்கள் தங்கள் அடையாளத்துக்காக அலறுவதோடு, சமுதாயத்தில் தங்களுக்குரிய இடத்தையும் வாழ்வின் நோக்கத்தையும் அறியத் துடிக்கின்றனர். இல்லறம் நடத்துகிறவர்கள் தங்கள் விவாக நிலையையும் குடும்பத்தையும், பொருளாதாரத்தையும் எதிர்கொள்ளத் தடுமாறுகிறார்கள். குடும்ப உறவிலும் ஐக்கியத்திலும் ஏராளமான முறிவுகள் காணப்படுகின்றன.

தாங்கள் பாதிக்கப்படவில்லை என்று கூறி யதார்த்தங்களைச் சுதாகரித்துக் கொள்வது எளிது. உங்கள் சொந்தப் பிரச்சனை தலைக்கு மேலே இருக்கிறது என்பதால், பிறர் பிரச்சனைகளைக் கவனிப்பதற்கு நீங்கள் தயாராக இல்லை என்றும் சொல்லக்கூடும்.

ஆனால் இயேசுவானவர் இதனை வேறு விதமாகக் காண்கிறார். நாம் உலகின் ஒளி என்றும் மலை மீது கட்டப்பட்ட நகரம் என்றும் சொல்கிறார். இந்த பிரகடனம் நம்மை அகன்ற பார்வைக்கு உரியவர்களாகவும், தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்களாகவும் உருமாற்றுகிறது. விரும்புகிறீர்களோ இல்லையோ சூரிய ஒளி அனைவர் மீதும் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது! இயேசுவானவரின் இந்தப் பிரகடனத்தை ஒருவேளை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால், நீங்களும் நானும் ஜனங்களின் பார்வைக்குட்பட்ட நம்பிக்கையின் அடையளமாகவும் பிரச்சனைக்குத் தீர்வாகவும், குறைந்தபட்டம் பிரச்சனையின் தீர்வை இயேசுவினிடத்தில் பெறுவதற்கு வகை செய்பவராகவும் இருக்கிறீர்கள்.

சுகமளித்தளுக்குக் கருவியாக செயல்பட இயேசுவானவர் நம்மை அழைக்கிறார். இயேசுவானவர் மிக அருமையாக அந்தக் கடமையை நமது தோளிள் மீது வைத்து, இரட்சகரண்டை வழிநடத்தும் அடையாளமாகச் செயல்படச் செய்கிறார். இவை இயேசுவானவரின் ஆழ்ந்த வாஞ்சையாக உள்ளது. இந்த உலகின் இரட்சகராகிய இயேசுவான ஆழமான வாஞ்சை இதுவே.

நமது சபையார் ஒவ்வொருவரும் இயேசுவானவரின் சுகமளித்தல், சமரசம், சீரமைப்பு ஆகியவற்றின் விரிவாக்கத்திற்கு ஊடகமாகத் திகழ வேண்டும் என்பது எனது உண்மையான ஜெபமாகும். இது நமது சபையின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகவும் இருக்கிறது.


தேவன் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. 

No comments:

Post a Comment