Monday, June 6, 2016

வேதாகமப் பரிசுத்தத்தைப் பரப்புவதன் மூலம் தேசத்தைப் புதுப்பிப்போம்

இந்தக் காலாண்டுக்குப் பின்வரும் கருப்பொருளைத் தேர்ந்தெடுத்துள்ளோம்:

வேதாகமப் பரிசுத்தத்தைப் பரப்புவதன் மூலம் தேசத்தைப் புதுப்பிப்போம்

இது வல்லமையான கருப்பொருள் ஆகும். மெதடிஸ்ட் சபையின் ஒவ்வொருவரும் தங்கள் பரிசுத்தத்தைப் பேணுவதே இதில் உள்ள சவால் ஆகும். தேவனால் எழுதப்பட்ட வார்த்தையின் மூலம் இந்தப் பரிசுத்தம் வருவதால், இது தனித்தன்மை வாய்ந்ததாய் உள்ளது.

பரிசுத்தமானது வல்லமையான தாக்கத்தை ஏற்படுத்தும். அது மாற்றத்தை விளைவிக்கும். தேவ ஜனங்களின் பரிசுத்தம் தேசத்தையும் மாற்றியமைக்கும். அந்த அளவுக்கு பரிசுத்தம் வல்லமை வாய்ந்தது. நமது பரலோக பிதா பரிசுத்தமாய் இருப்பது போல நாமும் அதனைக் காப்போம்.

‘பரிசுத்தம்’ மூன்று உட்பொருள்களைக் கொண்டிருக்கின்றன:
- மாற்றம்
- தூய்மை
- பிரகாசம் / பிரிவு

பரிசுத்த ஆவியானவரின் உதவி மற்றும் வழிகாட்டல் மூலம் இந்த உலகம் மற்றும் அதன் நெறியில் இருந்து நாம் மாறுபட்டிருக்க முடியும். தூய சிந்தையைக் கொண்ட ஜீவியத்தை நாம் கொண்டிருக்க முடியும். நம்பிக்கை இழந்து போனவர்களுக்கும் கட்டுகளுக்கு உட்பட்டவர்களுக்கும் இயேசுவானவரின் ஜோதியைக் கொண்டுவர முடியும்.

தேவன் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. 

No comments:

Post a Comment